- Advertisement -
மலையாளத்தில் வெளியான தென்னிந்திய மற்றும் வட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு இந்திய திரையுலகின் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறி த்ரிஷ்யம் திரைப்படம் தற்போது ஹாலிவுட்டுக்கும் செல்கிறது.
கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். இதில் மோகன்லால் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு மனைவியாக பிரபல தமிழ் நடிகை மீனா நடித்திருந்தார். இவர்கள் நடிப்பில் த்ரில்லர் கதைக்களத்தில் வௌியான த்ரிஷ்யம் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக மாறியது. மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம், வசூலிலும் சக்கைப்போடு போட்டது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்தது.
