spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'டியூட்' படம் எப்படி இருக்கு?.... ட்விட்டர் விமர்சனம் இதோ!

‘டியூட்’ படம் எப்படி இருக்கு?…. ட்விட்டர் விமர்சனம் இதோ!

-

- Advertisement -

டியூட் படத்தின் ட்விட்டர் விமர்சனம்.'டியூட்' படம் எப்படி இருக்கு?.... ட்விட்டர் விமர்சனம் இதோ!

பிரதீப் ரங்கநாதனின் 4வது படமாக உருவாகியிருந்த டியூட் திரைப்படம் இன்று (அக்டோபர் 17) உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. சாய் அபியங்கர் இதற்கு இசையமைத்திருக்கிறார். மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. எனவே ரசிகர்களும் இப்படத்தை காண ஆவலுடன் திரையரங்கிற்கு திரண்டு வருகின்றனர். அத்துடன் இப்படம் தொடர்பான தங்களின் கருத்துகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

we-r-hiring

அந்த வகையில் ரசிகர் ஒருவர், “டியூட் அருமையான படம். பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் பிளாக்பஸ்டர் பெற்றுள்ளார். மமிதா பைஜு எமோஷனல் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரனை வைத்து ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார்கள்” என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

மற்றுமொரு ரசிகர், “பிரதீப் ரங்கநாதன் ஸ்டைல், மமிதா பைஜுவுடனான காம்போ ஆகியவை அருமை. சரத்குமார் மின்னுகிறார். ஹிருதுவின் கதாபாத்திரம் அருமை. இசை ஓகே. இந்த படம் மெதுவாக தொடங்குகிறது. இடைவேளை 20 நிமிடங்கள் சிரிப்பலை. எமோஷனல் கனெக்ட் குறைவாக இருந்தாலும் நகைச்சுவை ஓரளவிற்கு கதையை நகர்த்துகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

வேறொரு ரசிகர், “இது ஒரு Gen Z ரொமான்டிக் காமெடி படம். கலகலப்பான பகுதிகள் ரசிகர்களை ஈர்க்கிறது. பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒருமுறை இளைஞர்கள் மத்தியில் ஒரு கலர்ஃபுல்லான பொழுதுபோக்கு படத்தை கொடுத்துள்ளார்” என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ