Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு......திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு……திரையுலகினர் அதிர்ச்சி!

-

நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் வயது 57.

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகமானவர் மாரிமுத்து.  அதன் பின் இயக்குனராக உருவெடுத்த இவர் கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். வாலி, யுத்தம் செய், சண்டக்கோழி 2, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

அதுமட்டுமில்லாமல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் இவரின் நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் திடீரென இன்று காலை மாரடைப்பால் மாரிமுத்து காலமானார்.  இந்த தகவல் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ