Homeசெய்திகள்சினிமாவிக்ரம் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட 'காட்டி' படக்குழு!

விக்ரம் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘காட்டி’ படக்குழு!

-

- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் இளைய திலகம் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். விக்ரம் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட 'காட்டி' படக்குழு!அதைத் தொடர்ந்து இவர் சிகரம் தொடு, வெள்ளைக்காரதுரை, இது என்ன மாயம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் இறுகப்பற்று, ரெய்டு ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்தது இவர் முத்தையா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தான் காட்டி எனும் திரைப்படத்தில் நடிகை அனுஷ்காவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு. இந்த படத்தை க்ரிஷ் ஜகர்லாமுடி இயக்குகிறார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. நாகவல்லி வித்தியாசாகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மனோஜ் ரெட்டி இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். விக்ரம் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட 'காட்டி' படக்குழு!மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இப்படம் 2025 ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வந்தன. இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபுவின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 15) காட்டி படத்தில் இருந்து புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ