Homeசெய்திகள்சினிமாகுட் நைட் பட ஹீரோயினுக்கு திருமணம் நடந்து முடிந்தது!

குட் நைட் பட ஹீரோயினுக்கு திருமணம் நடந்து முடிந்தது!

-

குட் நைட் பட ஹீரோயின் மீதா ரகுநாத்துக்கு திருமணம் நடந்து முடிந்தது.

கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான படம் குட் நைட். குட் நைட் பட ஹீரோயினுக்கு திருமணம் நடந்து முடிந்தது!இந்த படத்தில் ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க மீதா ரகுநாத் கதாநாயகியாக நடித்திருந்தார். குறட்டை என்பதை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றி படமாக அமைந்தது. அதே சமயம் படத்தில் நடித்திருந்த மணிகண்டன், மீதா ரகுநாத் ஆகிய இருவருமே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை வென்றனர். இந்நிலையில் மீதா ரகுநாத்துக்கு பெற்றோர் சம்மதத்துடன் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.குட் நைட் பட ஹீரோயினுக்கு திருமணம் நடந்து முடிந்தது!

மீதா ரகுநாத், குட் நைட் படத்திற்கு முன்பாக முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்தப் படத்திலும் பள்ளி மாணவி, கல்லூரி முடித்த இளம் பெண்ணாக இரு தோற்றங்களில் நடித்து அசத்தியிருந்தார். இவருடைய முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்த நிலையில் குட் நைட் திரைப்படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் நேற்று மீதா ரகுநாத்தின் சொந்த ஊரான ஊட்டியில் இவரது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. மீதா ரகுநாத்தை திருமணம் செய்து கொண்ட அந்த நபர் மீதாவின் நீண்ட நாள் நண்பர் என்பதும் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குட் நைட் பட ஹீரோயினுக்கு திருமணம் நடந்து முடிந்தது!தற்போது ரசிகர்கள் பலரும் இவர்களின் தற்போது ரசிகர்கள் பலரும் இந்த புதுமண தம்பதிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ