Homeசெய்திகள்சினிமாஅந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர சிரமப்பட்டேன்..... நடிகை மிர்ணாள் தாகூர்!

அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர சிரமப்பட்டேன்….. நடிகை மிர்ணாள் தாகூர்!

-

கடந்த 2022 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் பேசப்பட்ட படம் சீதாராமம். இந்த படத்தில் ராமனாக துல்கர் சல்மானும் சீதாவாக மிர்ணாள் தாகூரும் நடித்திருந்தனர். அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர சிரமப்பட்டேன்..... நடிகை மிர்ணாள் தாகூர்!இதில் துல்கர் சல்மான் தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பான் இந்தியா ஸ்டாராக மாறிவிட்டார். அதுபோல மிர்ணாள் தாகூர் தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார். படத்தில் மிர்ணாள் தாகூர், தன்னை மகாராணி என்பதை அறியாமல் ராணுவ வீரரை காதலிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர சிரமப்பட்டேன்..... நடிகை மிர்ணாள் தாகூர்!கடிதங்கள் மூலம் தனது காதலை வெளிப்படுத்தும் மிர்ணாள் தாகூரை கண்டுபிடிக்க துல்கர் சல்மான் அவரை தேடி வருகிறார். பின்னர் இருவரும் நேரில் சந்தித்து ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்குகின்றனர். பின்னர் இருவரின் வாழ்விலும் பல சம்பவங்கள் நடக்கும் பட்சத்தில் இருவரும் இணைந்து வாழ்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதையாக இருந்தது. இந்த படம் 1964ஆம் ஆண்டின் பின்னணியில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் இருவருக்கும் இடையேயான ஆழமான காதலை உருக்கமான கதையின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் இயக்குனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அனைத்து மொழி ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விட்டது. அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர சிரமப்பட்டேன்..... நடிகை மிர்ணாள் தாகூர்!இந்நிலையில் இந்த படத்தில் தான் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் குறித்து நடிகை மிர்ணாள் தாகூர் பேசியுள்ளார். அதன்படி, “ஒரு கதாபாத்திரத்தை நேசித்து விட்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவோம். சில நாட்கள் நாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் சீதா மகாலட்சுமி. அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர நான் மிகவும் சிரமப்பட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ