- Advertisement -
தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நிதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளாா். தாயகத்தின் எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எப்போதும் பெருமையாக கருதுவதாக தனது வலைதளத்தில் பதிவு செய்துள்ள அவர், எனது சிம்பனிக்கு VALIANT என்று பெயரிட்டேன். அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளை வீரத்துடன் நமது ராணுவத்தினர் மண்டியிட செய்வார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது. இந்திய ராணுவத்திற்கு தன்னுடைய சிறு பங்களிப்பாக, தேசிய பாதுகாப்பு நிதிக்கு தனது இசைக் கச்சேரியின் வருவாய் மற்றும் ஒரு மாத சம்பளத்தை கொடுப்பதாக இளையாராஜா அறிவித்துள்ளாா்.
சினிமாவில் 23 வருடங்களை நிறைவு செய்த தனுஷ்…. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘குபேரா’ படக்குழு!