கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார். நீண்ட வருடங்கள் கழித்து சங்கர், கமல் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படமானது ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜூன் 1) நேர அரங்கத்தில் மாலை 6 மணி அளவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராம்சரண், சிரஞ்சீவி, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் அனைத்து பாடல்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அனிருத்தின் மிரட்டலான இசையில் வெளியாகி உள்ள இந்த பாடல்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அனிருத், தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக வலம் வருபவர். இவர் இந்திய அளவில் பல பெரிய படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
Tune in to the sounds of INDIAN-2! 🇮🇳🥁 The complete album is OUT NOW streaming on all audio platforms. Let the powerful beats and soulful tunes surround you! 🔊
▶️ https://t.co/RpPzUSODSw#Indian2 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @LycaProductions… pic.twitter.com/QIoS5lp6ww
— Lyca Productions (@LycaProductions) June 1, 2024
இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் ஏ ஆர் ரகுமான் தான் இசை அமைத்திருந்தார். அவர் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க முடியாமல் போனது ரசிகர்களிடம் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் அனிருத்தின் இசையில் வெளியான இந்தியன் 2 படத்தின் பாரா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. அதைத்தொடர்ந்து வெளியான நீலோற்பம் பாடலும் அனிருத்தின் வழக்கமான ஸ்டைலில் இல்லாமல் மிக வித்தியாசமாக அமைந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் முதன்முறையாக சங்கர், அனிருத் கூட்டணியில் இந்தப் படம் உருவாகி இருப்பதால் இந்தியன் 2 படத்தில் தரமான சம்பவம் காத்திருக்கிறது இன்று பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.