கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தியன் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கமல், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது ப்ரமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. எனவே படமானது 2024 ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரையிடப்பட முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.
அடுத்ததாக படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி தற்போது ட்ரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியன் 2 படத்தின் டிரைலர் வருகின்ற ஜூன் 24 அன்று வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -