spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜூலை 14ல் இசையமைப்பாளர் இளையராஜாவின் (live Concert) இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அறிமுகம்!

ஜூலை 14ல் இசையமைப்பாளர் இளையராஜாவின் (live Concert) இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அறிமுகம்!

-

- Advertisement -

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கச்சேரிக்கான ( live Concert ) போஸ்டர் மற்றும் டிக்கெட் அறிமுக விழா சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.ஜூலை 14ல் இசையமைப்பாளர் இளையராஜாவின் (live Concert) இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அறிமுகம்!

அருண் ஈவன்ட்ஸ் – மெர்க்குரி நிறுவனத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ( Truly live in concert )வரும் ஜூலை 14 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.

we-r-hiring

இந்த இசை நிகழ்ச்சியை காண ஏராளமான ரசிகர்கள் வரக்கூடும் என்பதால் இசை நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் என்னவெல்லாம் செய்யப்பட உள்ளது என்பது குறித்து, நிகழ்ச்சியை நடத்தும் அருண் ஈவன்ட்ஸ் அமைப்பின் தலைவர் அருண் தெரிவித்தார்.

அதில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு BRONZE, SILVER, GOLD, VIP, VVIP வரிசையில் டிக்கெட்டுகள் வகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், டிக்கெட் கட்டணம் 1000 ரூபாய் முதல் துவங்கி 3000,6000,10000 என 25000 ரூபாய் வரையிலான டிக்கெட்டுகள் உள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியில் 55 முதல் 60 வரையான பாடல்களை இளையராஜா பாட இருக்கிறார் என்றும்.

ஜூலை 14 ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு சரியாக நிகழ்ச்சி துவங்கும் நிலையில், 3 மணி முதல் ரசிகர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படுவர்காள் என்று‌ தெரிவித்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு முறையான கார் பார்க்கிங் மற்றும் மொபைல் டாய்லெட் வசதிகள் எல்லா gelleryயிலும் இருக்கும் எனவும் ஒவ்வொரு gelleryயிலும் 2 நர்ஸ் இருப்பார்கள். ஆம்புலன்ஸ் வசதியும் பாதுகாப்புக்கு இருக்கும் என்று ஈவன்ட்ஸ் சார்பில் தெரிவித்துள்ளனர்.ஜூலை 14ல் இசையமைப்பாளர் இளையராஜாவின் (live Concert) இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அறிமுகம்!

தண்ணீர் மற்றும் உணவு பொருட்கள் வெளியில் வாங்கும் அதே விலைக்கு தர முடிவு பண்ணி சில நிறுவனங்களுடன் டைஅப் பண்ணி இருக்கோம் என தெரிவித்தார். தண்ணியை இலவசமாக தர பேசி கொண்டு இருப்பதாகவும், இளையராஜாவின் 50 வது ஆண்டு திரை பயணத்தை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், 55 முதல் 60 பாடல்களை இளையராஜா சார் பாட இருக்கிறார் என்றும் கூறியிருந்தனர்.

மைதானத்துக்கு வரும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு, இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் காவல் இணை ஆணையர் உடன் கலந்து பேசி சில அறிவுரைகளும், சில மாற்றங்கள் சொன்னதாகவும் கூறியவர், மதுரை, திருச்சி, கோவை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பவுன்சர்கள் வர உள்ளார்கள் என தெரிவித்திருந்தார்.

MUST READ