- Advertisement -
திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் நாயகிகளாக வலம் வருபவர்களை விட, இன்ஸ்டா பிரபலங்களுக்கு தான் பாலோவர்கள் அதிகம். நடிகைகளை காட்டிலும் சமூக வலைதளங்களில் இன்ஸ்டா பிரபலங்களுக்கு மதிப்பு அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போதைய சூழலில் இன்ஸ்டாகிராமை கலக்கி வரும் சகோதரிகள் அமலா ஷாஜி மற்றும் அமிர்தா ஷாஜி. இரட்டை சகோதரிகள் ஆன அவர்கள், இன்ஸ்டாவில் டிரான்ஸ்பார்ம் வீடியோக்கள் மூலம் பிரபலமாகினர். இதில் அமலா ஷாஜியை மட்டும் 41 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், ஐடி ஊழியர் ஒருவர், அமலா ஷாஜி மீது மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். அமலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு சில டிரேடிங் நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்திருக்கிறார். அதில் 1000 ரூபாய் கட்டினால் 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் இவ்வாறு தொடர்ந்து அவர் விளம்பரம் செய்து வந்துள்ளார். இதைக் கண்ட அவரது பாலோயர்களில் ஒருவரனா ஐடி ஊழியர், அதில், முதலீடு செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தங்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் அனுப்பப்படும். அதற்கு முன்பாக 9 ஆயிரம் ரூபாயை நிறுவனத்திற்கு அனுப்புங்கள் என தெரிவித்துள்ளார்.




