நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்றுள்ளார். அதன்படி ஏகப்பட்ட படங்களில் நடித்து மீண்டும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். அந்த வகையில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் விஷ்வம்பரா, டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் ஐடெண்டிட்டி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் உருவாகி இருந்த பிருந்தா எனும் வெப் தொடர் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக இவர் அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தான் விஜய் நடிப்பில் உருவாகியிருந்த கோட் திரைப்படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருந்தார் திரிஷா. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட வெளியான கோட் திரைப்படத்தை காண ஆவலுடன் திரண்டு வந்த ரசிகர்கள் திரையின் திரிஷாவை கண்டதும் மிகுந்த உற்சாகத்துடன் ஆரவாரம் எழுப்பினர். எனவே கோட் படத்தின் திரிஷா நடனமாடிய மட்ட பாடல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
அந்த பாடலில் கில்லி அப்படி போடு பாடலின் ஸ்டெப்பை ரீ-கிரியேட் செய்திருந்தனர். ரசிகர்களுக்கு அது இன்னும் உற்சாகத்தை தந்தது. இந்நிலையில் நடிகை திரிஷா இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்ட பாடலின் புகைப்படங்களை வெளியிட்டு, “கடந்த மார்ச் 5ஆம் தேதி எனக்கு பிடித்தவர்களுடன் நடந்த சின்ன குத்தாட்டம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -