Homeசெய்திகள்சினிமா'லவ்வர் படம் ரசிகர்களை ஏமாற்றாது' ..... இசை வெளியீட்டு விழாவில் ஜெய் பீம் மணிகண்டன்!

‘லவ்வர் படம் ரசிகர்களை ஏமாற்றாது’ ….. இசை வெளியீட்டு விழாவில் ஜெய் பீம் மணிகண்டன்!

-

'லவ்வர் படம் ரசிகர்களை ஏமாற்றாது' ..... இசை வெளியீட்டு விழாவில் ஜெய் பீம் மணிகண்டன்!ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான மணிகண்டன் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் குட் நைட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் மணிகண்டன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.'லவ்வர் படம் ரசிகர்களை ஏமாற்றாது' ..... இசை வெளியீட்டு விழாவில் ஜெய் பீம் மணிகண்டன்! இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் டீசர், பாடல்கள், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட மணிகண்டன், “உலகில் முதன்முதலாக தோன்றிய உணர்வு, காதல். ஆனால் அது எப்போதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள உறவு சிக்கல் மிகுந்ததாகவே இருக்கிறது. இன்றைய இளைஞர்களின் காதலையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் விரிவாக பேசக்கூடிய ரொமாண்டிக் படம் தான் லவ்வர். 'லவ்வர் படம் ரசிகர்களை ஏமாற்றாது' ..... இசை வெளியீட்டு விழாவில் ஜெய் பீம் மணிகண்டன்!அனைவரையும் கவரும் விதத்தில் இப்படத்தை ஒரு கமர்சியல் படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பிரபு ராம் வியாஸ். ஏற்கனவே நான் நடித்த ஜெய் பீம், குட் நைட் ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஷான் ரோல்டன் தான் லவ்வர் படத்திற்கும் இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவாகியுள்ள பத்து பாடல்களும் வித்தியாசமானதாகவும் அழுத்தமானதாகவும் இருக்கும். அவரின் பின்னணி இசை படத்தின் கதையையும் காட்சிகளையும் மேலும் மெருகேற்றி உள்ளது. நான் எப்போதும் கூறுவது போல் லவ்வர் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை ஏமாற்றாது” என்று பேசியுள்ளார்.

MUST READ