Homeசெய்திகள்சினிமாதமிழ் சினிமாவையே புரட்டி போட்ட 'ஜெயிலர்' பட வசூல் சாதனை!

தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட ‘ஜெயிலர்’ பட வசூல் சாதனை!

-

ரஜினி, நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம் முதல் நாளில் இருந்து தற்போது வரை திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டு வருடங்கள் கழித்து ரஜினியின் திரைப்படம் வெளியானதால் ரசிகர்களும் ஜெய்லர் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.  தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்படம் ஒரு வாரத்தில் 375 கோடிக்கு மேல் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டடிருந்தது.

தற்போது 11 நாட்களில் 500 கோடி கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவிலேயே அதிவேகமாக 500 கோடியை வசூலித்த 2.O படத்திற்குப் பிறகு ஜெயிலர் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ