Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 'சைரன்' படத்தின் நேற்று வரை பாடல் வெளியானது!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘சைரன்’ படத்தின் நேற்று வரை பாடல் வெளியானது!

-

- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் சைரன் படத்தின் நேற்று வரை பாடல் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 'சைரன்' படத்தின் நேற்று வரை பாடல் வெளியானது!ஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ஜன கன மன, ஜீனி, பிரதர், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

இதற்கிடையில் அந்தோணி பாக்கியராஜ் இயக்கும் சைரன் படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் ஜெயம் ரவி உடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் , யோகி பாபு, அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சைரன் படத்தின் முதல் பாடலான நேற்று வரை என்னும் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 'சைரன்' படத்தின் நேற்று வரை பாடல் வெளியானது!

இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். தாமரை பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல் ஜெயம் ரவிக்கும் அனுபமா பரமேஸ்வரனுக்கும் இடையிலான காதல் பாடலாக வெளியாகி உள்ளது.

MUST READ