சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பயணம் செய்தவர்களில் ஒருவர் நடிகர் ரியோ ராஜ். இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் ஜோ எனும் திரைப்படம் வெளியானது. கடந்த நவம்பர் 24ஆம் தேதி வெளியான படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. இந்த படத்தில் ரியோ ராஜுடன் இணைந்து மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு சித்து குமார் இசை அமைத்துள்ளார். அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் உணர்வுபூர்வமான காதல் கதையை கையில் எடுத்து அதன் மூலம் இன்றைய இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். மேலும் ரியோவிற்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் ஜோ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது 7 வாரங்களைக் கடந்து 8வது வாரமாக ஜோ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -