Homeசெய்திகள்சினிமா'கங்குவா' படம் நெருப்பு மாதிரி இருக்கும்.... மிகுந்த நம்பிக்கையுடன் பேசிய சூர்யா!

‘கங்குவா’ படம் நெருப்பு மாதிரி இருக்கும்…. மிகுந்த நம்பிக்கையுடன் பேசிய சூர்யா!

-

- Advertisement -

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க இதில் திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ் ஆகிய பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.'கங்குவா' படம் நெருப்பு மாதிரி இருக்கும்.... மிகுந்த நம்பிக்கையுடன் பேசிய சூர்யா! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும், மிகப்பிரமாண்டமாகவும் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசரும், ட்ரைலரும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில் தான் நேற்று (நவம்பர் 10) இந்த படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இணையத்தையும் கலக்கி வருகிறது. அந்த அளவிற்கு கங்குவா படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரில் விஷுவல்ஸ் மிரட்டலாக இருந்தது. ஏற்கனவே சொல்லப்பட்டதை போல் இந்த படம் சூர்யாவின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நடிகர் சூர்யா, ஒவ்வொரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கங்குவா படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்ததோடு நம்பிக்கையாகவும் பேசி இருக்கிறார். 'கங்குவா' படம் நெருப்பு மாதிரி இருக்கும்.... மிகுந்த நம்பிக்கையுடன் பேசிய சூர்யா!அதில் ஒரு நிகழ்ச்சியில், “இந்த படத்தை பிலிம் மேக்கர்கள் அனைவரும் வாயை பிளந்து பார்க்க போறாங்க” என்று மிகுந்த நம்பிக்கையுடன் பேசியிருந்தார். அதுபோன்று நேற்று நடந்த ‘கங்குவா’ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்விலும், இந்த படம் நெருப்பு மாதிரி இருக்கும் என்றும் படம் தரமாகவும் சிறப்பாகவும் அமைவதற்காக தான் இந்த படத்திற்காக இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டோம் என்றும் கூறியிருக்கிறார்.

MUST READ