Homeசெய்திகள்சினிமாஇனி எப்போ வேணா பாக்கலாம்.... நெட்பிளிக்ஸில் வெளியானது கார்த்தியின் 'மெய்யழகன்'!

இனி எப்போ வேணா பாக்கலாம்…. நெட்பிளிக்ஸில் வெளியானது கார்த்தியின் ‘மெய்யழகன்’!

-

- Advertisement -

கார்த்தியின் மெய்யழகன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.இனி எப்போ வேணா பாக்கலாம்.... நெட்பிளிக்ஸில் வெளியானது கார்த்தியின் 'மெய்யழகன்'!

கார்த்தி நடிப்பில் உருவாகியிருந்த மெய்யழகன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் இணைந்து 2D நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தனர். 96 பட இயக்குனர் பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க மகேந்திரன் ராஜு ஒளிப்பதிவு செய்திருந்தார்.இனி எப்போ வேணா பாக்கலாம்.... நெட்பிளிக்ஸில் வெளியானது கார்த்தியின் 'மெய்யழகன்'! எமோஷனல் கலந்த குடும்பப் பொழுது போக்கு படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் இந்த படம் அக்டோபர் 25 நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானதன்படி தற்போது இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது. எனவே ரசிகர்கள் இந்த படத்தினை ஓடிடியில் கண்டு ரசித்து வருகின்றனர்.

MUST READ