Homeசெய்திகள்சினிமாகடல்லயே இல்லையாம்... திருமணம் குறித்த கேள்விக்கு அசால்ட்டா பதில் சொன்ன கீர்த்தி சுரேஷ்!

கடல்லயே இல்லையாம்… திருமணம் குறித்த கேள்விக்கு அசால்ட்டா பதில் சொன்ன கீர்த்தி சுரேஷ்!

-

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த கேள்விக்கு நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டாஸ் ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

நடிகை என்றாலே காதல் திருமணம், காதல், டேட்டிங் உள்ளிட்ட கிசுகிசுக்களுக்கு கட்டாயம் ஆளாக வேண்டும் என்ற நிலை சினிமாவில் எப்போதும் இருந்து வருகிறது.

கீர்த்தி சுரேஷ் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன! இதற்கு முன்னர் அனிருத்தும் கீர்த்தி சுரேஷ் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் கீர்த்தி சுரேஷின் பெற்றோர் இதை மறுத்தனர்.

இப்போதும் அவர் திருமணம் குறித்த கேள்விகள் எங்கும் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் பதில் அளித்து வந்த போது, ஒருவர் அவர் திருமணம் குறித்து கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு வடிவேலு தனது அண்டர்வேரில் கையை விட்டு ஏதும் இல்லை என்று காண்பிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கடல்லயே இல்லையாம் என்று நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

MUST READ