Homeசெய்திகள்சினிமாசூர்யா44 திரைப்படத்தில் இணைந்த மற்றொரு மலையாள பிரபலம்

சூர்யா44 திரைப்படத்தில் இணைந்த மற்றொரு மலையாள பிரபலம்

-

- Advertisement -
kadalkanni
 தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் சூர்யா. அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் கங்குவா. இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றன. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசை அமைக்கிறார்.
இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் மற்றொரு மலையாள பிரபலம் இணைந்துள்ளார். ரசவாதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுஜித் ஷங்கர், இத்திரைப்படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்தமான் தீவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இவரும் கலந்து கொண்டதாக தெரிகிறது.

MUST READ