- Advertisement -
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உருவான மிக்ஜாம் புயல், சென்னை, உள்பட வடமாவட்டங்களை புரட்டிப் போட்டது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமழை மற்றும் வெள்ளத்தால் ஸ்தம்பித்து போயின. பொதுமக்கள் பலரும் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம் திரைப்பட பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

மத்திய சென்னை மட்டுமன்றி சென்னை புறநகர் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன. மற்றொரு பக்கம் அவசர தேவைகளுக்கு கூட அழைக்க முடியாமல், தொலைதொடர்பு சேவைகள் முடங்கியுள்ளன.




