Homeசெய்திகள்சினிமாபாராட்டு மழையில் 'மெய்யழகன்'..... முதல் நாள் வசூல் விபரம்!

பாராட்டு மழையில் ‘மெய்யழகன்’….. முதல் நாள் வசூல் விபரம்!

-

- Advertisement -

மெய்யழகன் படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது.பாராட்டு மழையில் 'மெய்யழகன்'..... முதல் நாள் வசூல் விபரம்!

கார்த்தி நடிப்பில் உருவாகியிருந்த மெய்யழகன் திரைப்படம் நேற்று (செப்டம்பர் 27ஆம் தேதி) திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தின் கார்த்திக் மற்றும் அரவிந்த்சாமி ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், இளவரசு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திலேயே சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்க கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைத்திருந்தார். மகேந்திரன் ராஜூ இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருந்தார். எமோஷனல் கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகிய இருவருக்கும் இடையிலான பாசப்பிணைப்பை எதார்த்தமான கதையில் காட்டிருந்தார் பிரேம்குமார். பாராட்டு மழையில் 'மெய்யழகன்'..... முதல் நாள் வசூல் விபரம்!அதாவது இந்த அவசர உலகில் அனைவரும் அன்பினை உணர ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த படம் தான் மெய்யழகன். இவ்வாறு பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வரும் இந்தப் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட மூன்று கோடி வரை வசூல் செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுமுறை நாட்கள் என்பதால் இனிவரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ