Homeசெய்திகள்சினிமாபா. ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்'......ஷூட்டிங் எப்போது?

பா. ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’……ஷூட்டிங் எப்போது?

-

- Advertisement -

இயக்குனர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர் கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.பா. ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்'......ஷூட்டிங் எப்போது? தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் பா. ரஞ்சித். கடைசியாக இவர் தங்கலான் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தது பா. ரஞ்சித், வேட்டுவம் என்ற திரைப்படத்தை இயக்கப் போகிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே வெளியானது. ஆனால் படமானது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இந்நிலையில் மீண்டும் இந்த படத்தை கையில் எடுத்துள்ளார் பா. ரஞ்சித். அதன்படி இவர் இயக்க உள்ள வேட்டுவம் திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களுடன் இணைந்து அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். பா. ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்'......ஷூட்டிங் எப்போது?கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகப் போவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ