spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரசிகர்களே தயாரா.... 'பராசக்தி' பட முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

ரசிகர்களே தயாரா…. ‘பராசக்தி’ பட முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

பராசக்தி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.ரசிகர்களே தயாரா.... 'பராசக்தி' பட முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படமானது சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வருகிறது. ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ‘மதராஸி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் அடுத்தது ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். ரசிகர்களே தயாரா.... 'பராசக்தி' பட முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!அதன்படி இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன. மேலும் விரைவில் முதல் பாடல் வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 20) மாலை 6 மணி அளவில் தீபாவளி தின ஸ்பெஷலாக புதிய அப்டேட் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இது ‘பராசக்தி’ படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரசிகர்களே தயாரா.... 'பராசக்தி' பட முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

we-r-hiring

டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ