நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரபாஸ் நடிப்பில் சலார் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது. அடுத்ததாக பிரபாஸ் ராஜாசாப், ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சந்தோஷ் நாராயணனின் இசையிலும் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபாஸ் தவிர கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா போன்ற பிரபலங்களும் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. டைம் டிராவல் சம்பந்தமான கதை களத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இந்த படமானது 2024 ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வருகின்ற ஜூன் 10 அன்று இந்த படத்தின் டிரைலரை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி அடுத்தடுத்த போஸ்டர்களையும் வெளியிட்டு வருகின்றனர். தற்போது அமிதாப் பச்சனின் புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
𝐇𝐢𝐬 𝐰𝐚𝐢𝐭 𝐢𝐬 𝐞𝐧𝐝𝐢𝐧𝐠…
3 days to go for #Kalki2898AD Trailer, out on June 10th.@SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD @saregamaglobal @saregamasouth #Kalki2898ADonJune27 pic.twitter.com/OVjVKrEqXg
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) June 7, 2024
இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் தவிர ஜப்பான், ஸ்பெயின், கொரியன் போன்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறதாம். அதாவது கிட்டத்தட்ட 13 மொழிகளில் வெளியாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.