Homeசெய்திகள்சினிமாஅடித்துக்கொள்ளும் ரஜினி, விஜய் ரசிகர்கள்.... காக்கா, கழுகு சண்டை தீவிரம்...

அடித்துக்கொள்ளும் ரஜினி, விஜய் ரசிகர்கள்…. காக்கா, கழுகு சண்டை தீவிரம்…

-

- Advertisement -
சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையேயான சண்டை மிகவும் மோசமாக இருக்கிறது.

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் த கோட் படம் பற்றி ரஜினி ரசிகர் ஒருவர் காப்பி படமா இது? என கேட்க அதற்கு வெங்கட் பிரபு ஒரு பதிலடி கொடுத்திருப்பார். இந்நிலையில், நடிகை ரம்பா அளித்த பேட்டியில் அருணாச்சலம் படத்தில் நடித்தபோது நடந்த சம்பவத்தை பற்றிப் பேசியிருப்பார். படப்பிடிப்பு தளத்தில் இந்தி நடிகர் சல்மான்கான் வந்தபோது, அவர் கட்டிப்பிடித்தது பற்றியும், அதை வைத்து ரஜினிகாந்த் கலாட்டா செய்தது பற்றியும் கூறியிருந்தார். அடுத்து படப்பிடிப்பு தளத்தில் திடீரென மின் இணைப்பை துண்டிப்பானபோது, தன்னை யாரோ தோளில் தட்டிவிட்டு போனார்கள், நான் பயந்து போயிட்டேன். அப்புறம் அதை செய்தது ரஜினி சார். என ஜாலியாக கூறியிருப்பார்.

 

 

கோட் படத்திற்காக வெங்கட் பிரபு, ரஜினி ரசிகரை கிண்டல் அடித்ததால், பதிலுக்கு ரம்பாவின் இந்த பேட்டி விவகாரத்தை விஜய் ரசிகர்கள் கையில் எடுத்துக் கொண்டனர். ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி என ஹேஷ்டேக்கில் அதை ஒரு பாலியல் துன்புறுத்தல் போல சித்தரித்து பதிவுகளை போடத் தொடங்கினர். பதிலுக்கு ரஜினி ரசிகர்கள் ஆம்பள ஷகிலா விஜய் என ஆரம்ப காலங்களில் விஜய் நடித்த படங்கலில் இருந்து பல ஆபசமான காட்சிகளை பதிவிட்டு வந்தனர்.

 

விஜய், அஜித் ரசிகர்கள் இடையே தான் மோதல் வருவது வழக்கம். ஆனால், தற்போது விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் அடித்துக் கொள்கின்றனர். அதுவும் ஆபாச வார்த்தைகளால் ஹேஷ்டே் பதிவிடுவது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ