Homeசெய்திகள்சினிமாரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் ரிலீஸ் எப்போது?

ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

ரஜினி நடிக்கும் கூலி படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் ரிலீஸ் எப்போது?

நடிகர் ரஜினி கடந்தாண்டு வெளியான ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு தனது 170 ஆவது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அதே சமயம் நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் ரிலீஸ் எப்போது?ஆக்சன் நிறைந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினி நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிக்கிறார். படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் கூலி திரைப்படமானது 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ