ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகளை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் படத்தின் முதல் மூன்று பாடல்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.
மேலும் கடந்த ஜூன் 28ஆம் தேதி பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.