spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ரவி மோகன்.... வைரலாகும் புகைப்படங்கள்!

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ரவி மோகன்…. வைரலாகும் புகைப்படங்கள்!

-

- Advertisement -

ரவி மோகன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ரவி மோகன்.... வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் ஜெயம், எம். குமரன், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ரவி. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இது தவிர பல இயக்குனர்களிடமும் கதை கேட்டு வருகிறார் ரவி. இதற்கிடையில் இவர், டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் தன்னுடைய 34 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதன்படி ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைக்கப் போவதாகவும், இந்த படத்திற்கு கராத்தே பாபு என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின்படி இந்த படமானது அரசியல் சம்பந்தமான கதைக்களம் போல் தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ravi Mohan (@iam_ravimohan)

we-r-hiring

எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் படத்தின் பூஜையும் முடிந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் நடிகர் ரவி, கராத்தே பாபு படத்திற்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் நடிகர் ரவி, கராத்தே பாபு படத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக கிட்டத்தட்ட 12 கிலோ வரை தனது எடையை குறைத்து இருப்பதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ