நடிகை ருக்மினி வசந்த், காந்தாரா சாப்டர் 1 பட விழாவில் ரிஷப் ஷெட்டி குறித்து பேசியுள்ளார்.
கன்னட சினிமாவில் வெளியான ‘சப்த சாகரடாச்சே எல்லோ’ என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் ருக்மினி வசந்த். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஏஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தது இவர் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகியுள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது. நேற்று (செப்டம்பர் 22) இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
“#RishabShetty sir, thank you for this opportunity🫡. As a human being #KantaraChapter1 has changed me at cellular level🫰. I still remember, during SSA SideA premiere, you have appreciated my performance much, it’s very emotional🫶♥️”
– #RukminiVasanthpic.twitter.com/PF0Tb107vX— AmuthaBharathi (@CinemaWithAB) September 23, 2025

இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ் மீட்டின் போது நடிகை ருக்மினி வசந்த், ரிஷப் ஷெட்டி குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர், “ரிஷப் சார், காந்தாரா சாப்டர் 1 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இந்த படம் ஒரு மனிதராக என்னை வேறு மாதிரியாக மாற்றி விட்டது. சப்த சாகரடாச்சே எல்லோ- சைட் ஏ பட பிரீமியரின் போது நீங்கள் என்னுடைய நடிப்பை பாராட்டி பேசியது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. அது மிகவும் எமோஷனலானது” என்று தெரிவித்துள்ளார்.