இசையமைப்பாளர் சாய் அபியங்கர் பென்ஸ் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தனது ஜீ ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பென்ஸ் எனும் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படமானது லோகேஷ் கனகராஜ் யுனிவர்சில் இணைந்திருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மாதவன், நிவின் பாலி ஆகியோர் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இது தவிர நடிகை சம்யுக்தா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் எனவும் பல தகவல்கள் வெளி வருகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
BENZ loding 🧨💥
— abhyankkar (@SaiAbhyankkar) June 2, 2025

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “பென்ஸ் லோடிங்” என்று குறிப்பிட்டு அப்டேட் கொடுத்து இருக்கிறார். இதன் மூலம் இது என்ன அப்டேட்டாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.