spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாலிவுட் ஸ்டார் நடிகரின் வாரிசு உடன் இணைந்து நடிக்கும் சாய் பல்லவி!

பாலிவுட் ஸ்டார் நடிகரின் வாரிசு உடன் இணைந்து நடிக்கும் சாய் பல்லவி!

-

- Advertisement -

நடிகை சாய் பல்லவி பிரபல பாலிவுட் நடிகரின் வாரிசுடன் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை சாய் பல்லவி தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகை என்றே சொல்லலாம். மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக சாய் பல்லவிக்கு அங்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

we-r-hiring

சாய் பல்லவி தமிழில் மாரி 2, என்ஜிகே உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்கள் சரியாக வரவேற்பு பெறவில்லை. இருப்பினும் தமிழிலும் சாய்பல்லவிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகன் ஜூனைத் கான் உடன் சாய் பல்லவி இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரொமாண்டிக் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை சுனில் பாண்டே இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆமீர் கானின் மகன் ஜூனைத் கான் தற்போது தமிழில் சூப்பர் ஹிட் அடித்த லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் உடன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

MUST READ