நடிகர் சஞ்சீவ் தான் ‘வேல்’ படத்தில் நடித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சஞ்சீவ் சீரியல்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ மூலம் தான் அவருக்கு ரசிகர்கள் அதிகமானார்கள்.
தற்போது அவர் சன் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கயல் தான் தற்போது சன் டிவி சீரியல்களில் அதிக TRP ரேட்டிங்கில் முதல் சில இடங்களில் இருந்து வருகிறது.
இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ‘வேல்’ படத்தில் தான் நடித்துள்ள காட்சியின் ஸ்கிரீன் ஷாட் பகிர்ந்த அவர் நடிகராக என் முதல் படம். என்ன படம் என்று கண்டுபிடியுங்கள் என ரசிகர்களிடம் கேட்டிருந்தார்.
ரசிகர்கள் வேல் படம் என்று சரியாக கண்டுபிடித்து கமெண்ட் செய்து வருகின்றனர். வேல் படத்தில் சஞ்சீவ் சின்ன வயது சூர்யாவாக நடித்துள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.