இயக்குனர் வெங்கி அட்லுரி சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் வெங்கி அட்லுரி கடந்த 2023 ஆம் ஆண்டு தனுஷை வைத்து ‘வாத்தி’ எனும் திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இயக்கியிருந்தார். கல்வி சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் ‘லக்கி பாஸ்கர்’ எனும் திரைப்படத்தை இயக்கினார் வெங்கி அட்லுரி. இந்த படமும் ஏகபோக வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்தது வெங்கி அட்லுரி, சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். தற்காலிகமாக ‘சூர்யா 46’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வெங்கி அட்லுரி சமீபத்தில் நடந்த பேட்டியில் ‘வாத்தி’ படம் குறித்து பேசி உள்ளார்.
#VenkiAtluri: I narrated #SirMovie (#Vaathi) to RaviTeja Initially. He is busy. After that narrated to #Dhanush sir & Locked🤝#RaviTeja: Dhanush is a superb actor. Don’t wait for me. (After watching) No one could have been done better than Dhanush🔥pic.twitter.com/5gLpwSeuCb
— AmuthaBharathi (@CinemaWithAB) October 20, 2025

அதன்படி அவர், “நான் முதலில் வாத்தி படத்தின் கதையை ரவி தேஜாவிடம் சொன்னேன். அவர் பிசியாக இருந்ததால் அதன் பிறகு தனுஷிடம் சொன்னேன். அப்போது ரவி தேஜா, தனுஷ் மிகச்சிறந்த நடிகர். எனக்காக காத்திருக்க வேண்டாம். தனுஷை விட வேறு யாராலும் சிறப்பாக செய்ய முடியாதுன்னு சொன்னார்” என்று தெரிவித்துள்ளார்.