- Advertisement -
2024-ம் ஆண்டிற்கான கிராமி விருதுகள் விழாவில், இந்தியாவின் சக்தி இசைக்குழுவிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகம், இந்திய திரையுலகம், ஆசிய திரையுலகம், ஹாலிவுட் திரையுலகம் என அனைத்து உலக திரை நடிகர், நடிகைககள் மற்றும் திரைக்கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உலகெங்கிலும் உள்ள இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் விருது தான் கிராமி விருது. இது உயரிய விருதுகாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் கிராமி விருது விழா நடத்தப்பட்டு சிறந்த இசைக்கலைஞர்கள், பாடகர்கள், சிறந்த பாடல், சிறந்த ஆல்பம், மற்றும் பாடல் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தி ரெக்கார்டிங் அகாடமி இந்த விழாவை ஏற்பாடு செய்வது வழக்கமாகும்.


அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான கிராமி விருதும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த 66-வது விருது விழாவில், சிறந்த ஆல்பத்திற்கான பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. தி மொமண்ட் என்ற ஆல்பத்திற்காக விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த இசைக்குழுவில், உஸ்தாத் ஜாகீர் உசேன், செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன், ஷங்கர் மகாதேவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



