நடிகர் சிபி சத்யராஜ் , அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்ற பிரியாணி கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இந்தக் கொடுமை குறித்து அரசியல்வாதிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் திரைப் பிரபலங்கள் பலரும் இது தொடர்பாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே நடிகர் எம் எஸ் பாஸ்கர், பெண்கள் அனைவரும் அவசியம் தற்காப்பு கலை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அடுத்தது நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு துணையாக நிற்பேன் என்றும் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் நடிகரும் தவெக தலைவருமான விஜய், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
The term ‘Repeated Offender’ is a disgrace to the society and if it needs to be eradicated from the dictionary then capital punishment of the highest order is the need of the hour.Furthermore open and friendly communication between parents and children,students and faculty is…
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) December 29, 2024
தற்போது நடிகர் சிபி சத்யராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் அந்த பதிவில் “மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களால் சமுதாயத்திற்கு அவமானம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளால் பயமுறுத்தப்படாமல் இருப்பதற்கு அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். மரண தண்டனை என்பது தற்போது காலத்தின் தேவையாக இருக்கிறது. துணிச்சலுடன் புகார் அளித்த அந்த மாணவிக்கு சல்யூட்” என்று குறிப்பிட்டுள்ளார்.