Homeசெய்திகள்சினிமாகமல் படத்தில் நடித்ததால் முரண்டுபிடிக்கும் சித்தார்த்!

கமல் படத்தில் நடித்ததால் முரண்டுபிடிக்கும் சித்தார்த்!

-

நடிகர் சித்தார்த் கடைசியாக சித்தா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து எட்டு தோட்டாக்கள் குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் சித்தார்த்.கமல் படத்தில் நடித்ததால் முரண்டுபிடிக்கும் சித்தார்த்! இதற்கிடையில் நடிகர் சித்தார்த், கமல்ஹாசன் உடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். இப்படமானது ஜூலை 12 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.கமல் படத்தில் நடித்ததால் முரண்டுபிடிக்கும் சித்தார்த்! அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் இந்த படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணி அளவில் (ஜூன் 1) சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான முழு ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சித்தார்த், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல் படத்தில் நடித்ததால் முரண்டுபிடிக்கும் சித்தார்த்!ஏனென்றால் சித்தார்த், தற்போது படக்குழுவிடம் கமல்ஹாசனுக்கு நிகரான இடம் தனக்கும் கொடுக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம். அதாவது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனை சித்தார்த் தான் காப்பாற்றுவாராம். ஆகவே சித்தார்த்துக்கு இந்தியன் 2 படத்தில் ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் இருப்பதால் படத்தின் ப்ரமோஷன் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முரண்டு பிடிப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ