சிக்கந்தர் பட ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் சல்மான் கான் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் சிக்கந்தர். இந்த படத்தை சாஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். பிரிட்டாம் இந்த படத்திற்கு இசையமைக்க திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படமானது வருகின்ற மார்ச் 30ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளன. எனவே அடுத்ததாக இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை (மார்ச் 23) ஞாயிற்றுக்கிழமை அன்று சிக்கந்தர் படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கும் இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் என நம்பப்படுகிறது.