Homeசெய்திகள்சினிமாவெறித்தனமாக வொர்க்அவுட் செய்யும் சிம்பு... வீடியோ வைரல்...

வெறித்தனமாக வொர்க்அவுட் செய்யும் சிம்பு… வீடியோ வைரல்…

-

சிம்புவின் 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கியவர். STR 48 படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார். அதாவது ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க இருக்கிறார் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. அதோடு சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், படத்தில் கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. படத்தின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி வருகின்றன. ஆனால், படப்பிடிப்பு தொடங்கியது போல எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே, சிம்பு நடிப்பதாக கூறப்பட்ட கொரோனா குமார் தொடர்பான சர்ச்சைகளும் எழுந்தன. இதனால், சிம்பு நடிக்கும் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிம்பு நடிப்பில் இறுதியாக வௌியான வெந்து தணிந்தது காடு, மாநாடு ஆகிய இரு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டுமே சிம்புவுக்கு கம் பேக்காக அமைந்தது

இந்நிலையில், தேசிங்கு பெரியசாமி படத்திற்காக நடிகர் சிம்பு தீவிர வொர்க்அவுட் செய்து வருகிறார். படத்திற்காக அவர் தன்னை தயார் படுத்திக் கொள்ளும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனால், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

MUST READ