நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் சிவகார்த்திகேயன், ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, கத்தி, துப்பாக்கி போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், வித்யூத் ஜம்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படம் சிவகார்த்திகேயனின் மற்ற படங்களைப் போல் அல்லாமல் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகும் என்று செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த படம் கஜினி போன்ற மாறுபட்ட கதைகளத்தில் இருக்கும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாத ஆக்ஷன் காட்சிகளும் காதல் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது உடல் மொழியை மாற்ற சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளன. SK23 படம் குறித்து தொடர்ந்து வெளியாகும் இதுபோன்ற அப்டேட்டுகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி வருகிறது.