spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

-

- Advertisement -
kadalkanni

ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் பட நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

பிரபல தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆர், கடைசியாக தேவரா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்த படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது 31வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இந்த படமும் 2026 ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் கூட்டணியிலான புதிய படம் தொடர்பான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை!அதன்படி இந்த படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிகை ருக்மினி வசந்த் நடிக்க இருக்கிறாராம். இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ருக்மினி வசந்த் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK 23 படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கும் ஏஸ் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ