Homeசெய்திகள்சினிமாபலரும் விரும்பும் அந்த இயக்குனரை வேலைக்காரனாக வச்சிருக்கேன்.... எஸ்.ஜே. சூர்யா பேட்டி!

பலரும் விரும்பும் அந்த இயக்குனரை வேலைக்காரனாக வச்சிருக்கேன்…. எஸ்.ஜே. சூர்யா பேட்டி!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் எஸ்.ஜே. சூர்யா அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். பலரும் விரும்பும் அந்த இயக்குனரை வேலைக்காரனாக வச்சிருக்கேன்.... எஸ்.ஜே. சூர்யா பேட்டி!முதல் படமே இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத்தர விஜயின் குஷி படத்தையும் இயக்கி மீண்டும் வெற்றி பெற்றார். அதன் பிறகு நடிப்பதிலும் ஆர்வமடைய இவர் நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். மேலும் ஸ்பைடர், மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி, வீர தீர சூரன் போன்ற படங்களில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.

அதாவது எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்கள் வசூலிலும் அடித்து தூள் கிளப்புகிறது. அந்த வகையில் சமீப காலமாக வில்லன் என்றாலே நம் நினைவுக்கு வருவது எஸ்.ஜே. சூர்யா தான். இதற்கிடையில் இவர் மீண்டும் இயக்குனராக என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்றும் அதன்படி கில்லர் எனும் திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்றும் பல தகவல்கள் வெளிவந்தது.

தற்போது இது தொடர்பாக சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, “பல பேர் விரும்பி கேட்கும் ஒரு இயக்குனரை நான் வேலைக்காரனாக வைத்திருக்கிறேன். டேய் வாடா டைரக்ட் பண்ணனும் அப்படின்னு சொன்னா உடனே வந்துருவான்” என்று கலகலப்பாக பதில் அளித்துள்ளார். மேலும், “நான் கில்லர் என்கிற படத்தை இயக்கி, நடிக்கப் போகிறேன். இந்த படம் லவ், ஆக்சன், காமெடி ஆகிய அனைத்தும் கலந்த பக்கா கமர்சியல் படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் விரைவில் இப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ