Homeசெய்திகள்சினிமாநாளை வெளியாகிறது 'சூது கவ்வும் 2' படத்தின் டிரைலர்!

நாளை வெளியாகிறது ‘சூது கவ்வும் 2’ படத்தின் டிரைலர்!

-

- Advertisement -

சூது கவ்வும் 2 படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை வெளியாகிறது 'சூது கவ்வும் 2' படத்தின் டிரைலர்!

கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் எனும் டார்க் காமெடி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து பத்து வருடங்கள் கழித்து சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும் எனும் திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்தினை எஸ்.ஜே. அர்ஜுன் இயக்க மிர்ச்சி சிவா, ராதாரவி, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் தங்கம் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். கார்த்திக் கே தில்லை இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படமானது வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. நாளை வெளியாகிறது 'சூது கவ்வும் 2' படத்தின் டிரைலர்!இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும் அதைத் தொடர்ந்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்தது இந்த படத்தின் டிரைலர் நாளை (டிசம்பர் 3) வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ