spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் நன்றி தெரிவித்து ரஜினி அறிக்கை

முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் நன்றி தெரிவித்து ரஜினி அறிக்கை

-

- Advertisement -
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர். சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர். தன்னுடைய தனித்துவமான ஸ்டைலால் 73-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ரஜினிகாந்த், தொடர்ந்து ஹீரோ இமேஜை தக்கவைத்து ரசிகர்களையும் தக்கவைத்துள்ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய ரஜினியின் திரைப்பயணம் ஹீரோவாக மட்டுமில்லாமல் குணச்சித்திரம், வில்லன் என தொடர்ந்து வருகிறது.

we-r-hiring
அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லால் சலாம் திரைப்படம்பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்திலும் கமிட்டாகியுள்ளார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், அவரது பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகர், நடிகைகள் மட்டுமன்றி தமிழக முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

MUST READ