- Advertisement -
சின்னத்திரையில் ஏராளமான நடிகர்களும், துணை நடிகர்களும் பல தொடர்களில் நடித்து வருகின்றனர். அதில் முக்கிய பிரபலம் ராகுல் ரவி. சின்னத்திரை மூலமாக மக்களிடையே வரவேற்பை பெற்ற ராகுல் அடுத்ததாக, வெள்ளித்திரையிலும் முக்கிய கதாபாத்திரங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்து ஆர்வம் காட்டி வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர், முதலில் மாடலாக இருந்தார். இதைத் தொடர்ந்து மலையாளத்தில் பொன்னம்பளி என்ற தொடர் மூலமாக அறிமுகமானார். இதையடுத்து, 2017-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடரின் மூலமாக தமிழுக்கு அறிமுகம் ஆனார். இந்த தொடர் கன்னடத்திலும் ஒளிபரப்பானது.

நந்தினி தொடரின் மூலம் ராகுல் ரவி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அத்தொடர் அவருக்கு பெயரையும் பெற்றுக் கொடுத்தது. சின்னத்திரையில் கொடி கட்டிப் பறந்த ராகுல் ரவிக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் முடிந்தது. அவரது மனைவி பெயர் லட்சுமி நாயர். திருமணமாகி 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், அவரது மனைவி ராகுல் மீது புகார் அளித்தார். அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து ராகுலிடம் அவரது மனைவி லட்சுமி கேட்டபோது அவரை ராகுல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.




