பிரபல இயக்குனர் ராஜமௌலி, பாகுபலி படத்திற்கு சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார்.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசரும் ட்ரைலரும் வெளியான நிலையில் அடுத்தடுத்த பாடல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஐதராபாத்தில் கங்குவா பட தெலுங்கு ஃப்ரீ ரிலீஸ் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தெலுங்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இயக்குனர் ராஜமௌலியும் விழாவில் கலந்து கொண்டு நடிகர் சூர்யா குறித்து பேசியுள்ளார்.

இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் தான் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதாவது பாகுபலி 2 திரைப்படம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் பான் இந்திய படம் பாகுபலிக்கு,
நடிகர் சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் என மேடையில் பேசியுள்ளார் ராஜமௌலி. மேலும் “சூர்யாவையும் பிடிக்கும் சூர்யாவின் நடிப்பையும் பிடிக்கும். அவர் வாய்ப்பை இழக்கவில்லை. நான் தான் அவருடன் பணியாற்றும் வாய்ப்பை இழந்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும், இனிவரும் காலங்களில் ராஜமௌலி மற்றும் சூர்யா ஆகியோரின் கூட்டணியில் புதிய படம் உருவாக வாய்ப்புள்ளது என தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.