Homeசெய்திகள்சினிமா'சினிமாவில் அதிக ஹீரோயின்களோடு நடித்த சாதனையாளர்....அரை நூற்றாண்டு காலமாக சினிமாவில் நிலைத்து நிற்கும் ஹீரோ'- விரிவான...

‘சினிமாவில் அதிக ஹீரோயின்களோடு நடித்த சாதனையாளர்….அரை நூற்றாண்டு காலமாக சினிமாவில் நிலைத்து நிற்கும் ஹீரோ’- விரிவான தகவல்!

-

 

'சினிமாவில் அதிக ஹீரோயின்களோடு நடித்த சாதனையாளர்....அரை நூற்றாண்டு காலமாக சினிமாவில் நிலைத்து நிற்கும் ஹீரோ'- விரிவான தகவல்!
File Photo

இடையில்லாத சினிமா பயணம், 100- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோ, இந்தியாவிலேயே அதிக ஹீரோயின்களோடு நடித்த சாதனையாளர், இவர் ஏற்காத கதாபாத்திரங்கள் இல்லை, நடிக்காத ஜானர்கள் இல்லை. அவர் யார் தெரியுமா? தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரமாக விளங்கும் பாலய்யாதான்.

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்தார்!

பாலகிருஷ்ணா என்னும் இயற்பெயரை கொண்ட பாலய்யா, ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான எம்.டி.ராமாராவின் மகன் ஆவார். ஆஸ்கர் புகழ் ஆர்ஆர்ஆர் படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர், தெலுங்கு ஹீரோ கல்யாண்ராம் ஆகியோரின் சித்தப்பா. இப்படி பல அடையாளங்களைக் கொண்டவர் பாலகிருஷ்ணா. தனது 14 வயதிலே திரைத்துறைக்குள் நுழைந்த பாலகிருஷ்ணா, ‘தட்டம்மா கலா’ திரைப்படத்தின் மூலமாக கடந்த 1974- ஆம் ஆண்டு அறிமுகமானார். இது இவரது தந்தை எம்.டி.ராமாராவ் இயக்கிய திரைப்படம்.

தொடக்கக் காலத்தில் தந்தையின் திரை செல்வாக்கில் வளர்ந்த பாலகிருஷ்ணா, இத்தனை பெரும் நாயகனாக உருவான பின்னணியில், அத்தனை பேரின் உழைப்பும் அடங்கியிருக்கிறது. ‘சாஹசமி ஜீவிதம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலகிருஷ்ணா 17 படங்களில் டபுள் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன், பஞ்ச் வசனங்களால் புகழ் பெற்றவர் பாலகிருஷ்ணா.

தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள இவரின் பல படங்கள், 100 நாட்களைக் கடந்து வசூல் சாதனைப் படைத்துள்ளது. ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தனது பழைய படங்களை ரீரிலீஸ் செய்வது பாலகிருஷ்ணாவின் வழக்கம். தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே வியந்துப் பாராட்டிய பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமா மக்களின் இதயங்களில் சூப்பர் ஹீரோவாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

”வைகோவுக்கு திறமை இல்லை; அவரால் கட்சியை நடத்த இயலாது”

அரை நூற்றாண்டு காலமாக சினிமாவில் நிலைத்து நிற்கும் பாலகிருஷ்ணாவின் சிறந்த நடிப்பிற்காக பல்வேறு விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2001- ஆம் ஆண்டு நரசிம்ஹா நாயுடு படத்திற்காக ஆந்திர அரசின் மிக உயரிய விருதான நந்தி விருதைப் பெற்றுள்ளார். 2010- ஆம் ஆண்டு சிம்ஹா படத்திற்காகவும், 2014- ஆம் ஆண்டு லெஜெண்ட் படத்திற்காகவும் நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார்.

தந்தையைப் போன்று திரைத்துறை மட்டுமின்றி, அரசியலிலும் கலக்கி வரும் பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.

பாலகிருஷ்ணா இன்று (ஜூன் 10) தனது 64 வயதை அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு ஏபிசி சார்பிலும், வாசகர்கள் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

MUST READ