Homeசெய்திகள்சினிமாஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ... அதுதான் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் வெற்றி.... மனம்...

அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் … அதுதான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றி…. மனம் திறந்த சசிகுமார்!

-

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சசிகுமார் பேசியுள்ளார்.அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ... அதுதான் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் வெற்றி.... மனம் திறந்த சசிகுமார்!

சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசைய வைத்துள்ளார். வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படமானது தமிழ்நாட்டில் குடியேறும் ஈழத் தமிழர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ... அதுதான் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் வெற்றி.... மனம் திறந்த சசிகுமார்!இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 23) இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சசிகுமார், “டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் கதையை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே எடுத்திருக்கிறோம். அந்த அளவிற்கு இந்த கதை சிறப்பாக அமைந்திருக்கிறது. கதையைக் கேட்டதும் சிம்ரன் இந்த படத்தில் நடிக்க உடனே ஓகே சொன்னார். ஈழத்தமிழர்கள் இலங்கையில் இருந்து வந்து சென்னையில் தங்களின் வழிகளை மறைத்து எப்படி சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த படத்தை பார்த்து நம் குழந்தைகள் நம் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ... அதுதான் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் வெற்றி.... மனம் திறந்த சசிகுமார்!கலகலப்பாகவும், காமெடியாகவும் இந்த படம் நல்ல கருத்தை சொல்கிறது. மகிழ்ச்சியாக இந்த படத்தை பாருங்கள். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. எனவே இந்த படத்தை பார்த்த பிறகு அகதிகளாக வாழும் மக்களுக்கு, அரசு குடியுரிமை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு முன்வந்து அவர்களுக்கு குடியுரிமை வழங்கினால் அதுதான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ