spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅவர்களுக்கு பொறாமை - நடிகர் பாலா பதில்

அவர்களுக்கு பொறாமை – நடிகர் பாலா பதில்

-

- Advertisement -

அவர்களுக்கு பொறாமை - நடிகர் பாலா பதில்

நடிகர் பாலா அக்டோபர் 23ம் தேதி அவரது தாய்மாமன் மகள் கோகிலாவை கேரளாவின் எர்ணாகுளத்திலுள்ள கலூர் பாவகுளத்தில் திருமணம் செய்தார்.

we-r-hiring

நடிகர் பாலா முதலில் சந்தன சதாசிவ என்பரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாடகி அம்ருதா சுரேஷை திருமணம் செய்து கொண்டதாகவும் , இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்திருக்கிறார். இதையடுத்து மூன்றாவது முறையாக டாக்டர் எலிசபத் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தெரியவருகிறது.

சமீபத்தில் அம்ருதா சுரேஷ் விவாகரத்து நடைமுறைகளை மீறி
தன்னையும் தன்னுடைய மகளையும் மனரீதியாக துன்புறுத்துவதாக
புகார் அளித்த நிலையில் பாலா கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து, 4வதாக உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். நடிகர் பாலா  திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து அவரது முன்னாள் மனைவி உட்பட பல்வேறு தரப்பினர் விமர்சித்துள்ளனர்.

இவ்வாறு நான்காவதாக திருமணம் செய்து கொண்டது குறித்து சமூக வலைத்தளங்கள் விமர்சனங்கள் எழுந்ததற்கு ,”எங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைந்துள்ளது விரைவில் குழந்தை பிறக்கும். நான் ஒரு ராஜாவைப் போல வாழ்வேன். அவள் தான் என் ராணி. திருமணத்திற்கு பெண்கள் கிடைக்காதவர்கள் என்னை பார்த்து பொறாமை பட்டால் அது அவர்களின் தவறு” என  நடிகர் பாலா பதில் அளித்துள்ளார்.

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ பட ட்ரைலர் ரிலீஸ் எப்போது?

 

MUST READ