நடிகை அனிகா சுரேந்திரன் திரைத் துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். அதன்படி இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர். அந்த வகையில் இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார். பின்னர் விஸ்வாசம் திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து பெயர் பெற்றார். மேலும் இவர் புட்டபொம்மா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார் அனிகா. இவ்வாறு பிஸியான நடிகையாக வலம் வரும் அனிகா சுரேந்திரன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் இவர் புதுவிதமான ஆடைகளை அணிந்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கவர்ச்சியான ஆடைகள் அணிந்து இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் லைக்ஸ்களும் குவிந்து வரும் நிலையில் பல விமர்சனங்களும் குவிகின்றன. சமீபத்தில் இவரது ஆடை குறித்த விமர்சனம் எழுந்தது. அதற்கு அனிகா சுரேந்திரன் , “கவர்ச்சியான ஆடைகள் அணிவது எனது தனிப்பட்ட விருப்பம். சினிமாவில் இருக்கும் பெண்கள் பொதுவாக இது போன்ற விமர்சனங்களை எதிர்கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -